கலைச்சொற்கள்

தனிம அட்டவணைக் கலைச்சொற்கள்

தொகுதி, தொடர், இணைதிறன் — அட்டவணையைப் படிக்கத் தேவையான சொற்கள், இரு நாட்டுப் பாடநூல்களிலும் உள்ளபடி.

ஆவர்த்தன அட்டவணை Periodic table

தமிழ்நாடு: ஆவர்த்தன அட்டவணைதமிழ்நாடு: தனிம வரிசை அட்டவணைஇலங்கை: ஆவர்த்தன அட்டவணைவிக்கிப்பீடியா: தனிம அட்டவணை

தனிமங்களை அணு எண் வரிசையில் அடுக்கி, ஒத்த பண்புள்ளவை ஒரே நெடுவரிசையில் வரும்படி அமைத்த அட்டவணை. 1869-இல் மெண்டலீவ் வகுத்தார்.

பெயரை முன்மொழியுங்கள்

தனிமம் Element

தமிழ்நாடு: தனிமம்இலங்கை: மூலகம்விக்கிப்பீடியா: தனிமம்விக்கிப்பீடியா: மூலகம்

ஒரே வகை அணுக்களால் ஆன தூய பொருள்; வேதி முறையில் மேலும் எளிய பொருளாகப் பிரிக்க இயலாது.

பெயரை முன்மொழியுங்கள்

Atom Atom

ஒரு தனிமத்தின் மிகச் சிறிய அலகு: நடுவில் அணுக்கரு, சுற்றிலும் எலக்ட்ரான்கள்.

பெயரை முன்மொழியுங்கள்

Nucleus Nucleus

அணுவின் நடுவில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடங்கிய அடர்த்தியான பகுதி.

பெயரை முன்மொழியுங்கள்

Proton Proton

அணுக்கருவில் உள்ள நேர் மின்னூட்டத் துகள். இவற்றின் எண்ணிக்கையே அணு எண்.

பெயரை முன்மொழியுங்கள்

Neutron Neutron

அணுக்கருவில் உள்ள மின்னூட்டமற்ற துகள்.

பெயரை முன்மொழியுங்கள்

எதிர்மின்னி Electron

விக்கிப்பீடியா: எதிர்மின்னி

அணுக்கருவைச் சுற்றியுள்ள எதிர் மின்னூட்டத் துகள்; வேதிவினைகளை நிர்ணயிப்பவை இவையே.

பெயரை முன்மொழியுங்கள்

அணு எண் Atomic number

தமிழ்நாடு: அணு எண்இலங்கை: அணு எண்விக்கிப்பீடியா: அணு எண்

அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு தனிமத்துக்கும் தனித்த எண்; அட்டவணையின் வரிசை இதுவே.

பெயரை முன்மொழியுங்கள்

அணு நிறை Atomic mass

தமிழ்நாடு: அணு நிறைதமிழ்நாடு: அணு எடைஇலங்கை: சாரணுத்திணிவுவிக்கிப்பீடியா: அணு நிறைவிக்கிப்பீடியா: அணுத்திணிவு

ஒரு அணுவின் சராசரி நிறை, அணு நிறை அலகில் (u). கதிரியக்கத் தனிமங்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட ஐசோடோப்பின் நிறை அடைப்புக்குறிக்குள் தரப்படுகிறது.

பெயரை முன்மொழியுங்கள்

தொகுதி Group

தமிழ்நாடு: தொகுதிஇலங்கை: கூட்டம்விக்கிப்பீடியா: நெடுங்குழுவிக்கிப்பீடியா: குழு

அட்டவணையின் நெடுவரிசை (1 முதல் 18). ஒரே தொகுதித் தனிமங்கள் ஒத்த வேதிப் பண்புகள் கொண்டவை.

பெயரை முன்மொழியுங்கள்

தொடர் Period

தமிழ்நாடு: தொடர்தமிழ்நாடு: வரிசைஇலங்கை: ஆவர்த்தனம்விக்கிப்பீடியா: கிடைக்குழுவிக்கிப்பீடியா: கிடை வரிசை

அட்டவணையின் கிடைவரிசை (1 முதல் 7). ஒரே தொடரின் தனிமங்களுக்கு ஒரே எண்ணிக்கை எலக்ட்ரான் கூடுகள்.

பெயரை முன்மொழியுங்கள்

தொகுதி Block

தமிழ்நாடு: தொகுதிஇலங்கை: தொகுப்புவிக்கிப்பீடியா: வலைக்குழு

கடைசி எலக்ட்ரான் சேரும் துணைக்கூட்டைப் பொறுத்து அட்டவணை s, p, d, f என நான்கு தொகுப்புகளாகப் பிரிகிறது.

பெயரை முன்மொழியுங்கள்

எலக்ட்ரான் அமைப்பு Electron configuration

தமிழ்நாடு: எலக்ட்ரான் அமைப்புஇலங்கை: இலத்திரன் நிலையமைப்புவிக்கிப்பீடியா: இலத்திரன் அமைப்பு

எலக்ட்ரான்கள் கூடுகளிலும் துணைக்கூடுகளிலும் எப்படி நிரம்பியுள்ளன என்பதன் குறியீடு, எ.கா. 1s² 2s² 2p⁴.

பெயரை முன்மொழியுங்கள்

Electron shell Electron shell

அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமையும் ஆற்றல் மட்டம் (K, L, M, N …).

பெயரை முன்மொழியுங்கள்

Valency Valency

ஒரு அணு பிற அணுக்களுடன் இணையும் திறன் — பொதுவாக அது உருவாக்கும் பிணைப்புகளின் எண்ணிக்கை.

பெயரை முன்மொழியுங்கள்

ஐசோடோப்புகள் Isotope

தமிழ்நாடு: ஐசோடோப்புகள்தமிழ்நாடு: ஓரகத் தனிமங்கள்

ஒரே தனிமத்தின் அணுக்களில் நியூட்ரான் எண்ணிக்கை வேறுபடும் வடிவங்கள்.

பெயரை முன்மொழியுங்கள்

உலோகங்கள் Metal

தமிழ்நாடு: உலோகங்கள்விக்கிப்பீடியா: உலோகம்விக்கிப்பீடியா: மாழை

பளபளப்பு, மின் கடத்தல், தகடாக்கல், கம்பியாக்கல் பண்புகள் கொண்ட தனிமம்.

பெயரை முன்மொழியுங்கள்

அலோகங்கள் Non-metal

தமிழ்நாடு: அலோகங்கள்விக்கிப்பீடியா: அலோகம்விக்கிப்பீடியா: மாழையிலி

உலோகப் பண்புகள் இல்லாத தனிமம்; பெரும்பாலும் வாயு அல்லது நொறுங்கும் திண்மம்.

பெயரை முன்மொழியுங்கள்

உலோகப் போலிகள் Metalloid

தமிழ்நாடு: உலோகப் போலிகள்விக்கிப்பீடியா: மாழையனைவிக்கிப்பீடியா: மாழைபோல்வன

உலோகத்துக்கும் அலோகத்துக்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்ட தனிமம்; பல குறைகடத்திகள்.

பெயரை முன்மொழியுங்கள்

கார உலோகங்கள் Alkali metal

தமிழ்நாடு: கார உலோகங்கள்விக்கிப்பீடியா: கார உலோகங்கள்விக்கிப்பீடியா: கார மாழைகள்

தொகுதி 1 உலோகங்கள்; நீருடன் கடுமையாக வினைபுரிந்து காரம் தருபவை.

பெயரை முன்மொழியுங்கள்

காரமண் உலோகங்கள் Alkaline earth metal

தமிழ்நாடு: காரமண் உலோகங்கள்விக்கிப்பீடியா: காரக்கனிம மாழைகள்

தொகுதி 2 உலோகங்கள்; இவற்றின் ஆக்சைடுகள் காரத்தன்மை கொண்ட 'மண்கள்'.

பெயரை முன்மொழியுங்கள்

இடைநிலைத் தனிமங்கள் Transition element

தமிழ்நாடு: இடைநிலைத் தனிமங்கள்விக்கிப்பீடியா: தாண்டல் உலோகம்விக்கிப்பீடியா: பிறழ்வரிசை மாழைகள்

தொகுதி 3 முதல் 12 வரையுள்ள d-தொகுப்பு உலோகங்கள்.

பெயரை முன்மொழியுங்கள்

ஹாலஜன்கள் Halogen

தமிழ்நாடு: ஹாலஜன்கள்தமிழ்நாடு: ஹேலஜன்கள்தமிழ்நாடு: உப்பீனிகள்இலங்கை: அலசன்கள்விக்கிப்பீடியா: ஆலசன்

தொகுதி 17; உலோகங்களுடன் சேர்ந்து உப்புகளை உருவாக்குவதால் 'உப்பு உருவாக்கி' எனப் பொருள்படும் பெயர்.

பெயரை முன்மொழியுங்கள்

மந்த வாயுக்கள் Noble gas

தமிழ்நாடு: மந்த வாயுக்கள்தமிழ்நாடு: உயரிய வாயுக்கள்தமிழ்நாடு: அரிய வாயுக்கள்இலங்கை: விழுமியவாயுக்கள்விக்கிப்பீடியா: மந்த வளிமங்கள்விக்கிப்பீடியா: உறழ் வளிமங்கள்விக்கிப்பீடியா: சடத்துவ வாயுக்கள்

தொகுதி 18; முழுமையான வெளிக்கூடு உள்ளதால் அரிதாகவே வினைபுரியும் வாயுக்கள்.

பெயரை முன்மொழியுங்கள்

லாந்தனைடுகள் Lanthanide

தமிழ்நாடு: லாந்தனைடுகள்தமிழ்நாடு: லாந்தனாய்டுகள்விக்கிப்பீடியா: இலந்தனைடு

லாந்தனம் முதல் லுட்டீசியம் வரையுள்ள 15 தனிமங்கள்; 'அரிய மண் உலோகங்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன.

பெயரை முன்மொழியுங்கள்

ஆக்டினைடுகள் Actinide

தமிழ்நாடு: ஆக்டினைடுகள்தமிழ்நாடு: ஆக்டினாய்டுகள்விக்கிப்பீடியா: ஆக்டினைடு

ஆக்டினியம் முதல் லாரன்சியம் வரையுள்ள 15 கதிரியக்கத் தனிமங்கள்.

பெயரை முன்மொழியுங்கள்

சேர்வை Compound

இலங்கை: சேர்வை

இரண்டு அல்லது மேற்பட்ட தனிமங்கள் நிலையான விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்த பொருள்.

பெயரை முன்மொழியுங்கள்

Molecule Molecule

அணுக்கள் பிணைந்து உருவான, தனித்து நிற்கக்கூடிய மிகச் சிறிய அலகு.

பெயரை முன்மொழியுங்கள்

Chemical formula Chemical formula

ஒரு சேர்மத்தில் உள்ள தனிமங்களையும் அவற்றின் எண்ணிக்கையையும் குறியீடுகளால் காட்டுவது, எ.கா. H₂O.

பெயரை முன்மொழியுங்கள்

கதிரியக்கம் Radioactivity

விக்கிப்பீடியா: கதிரியக்கம்

நிலையற்ற அணுக்கருக்கள் தாமாகச் சிதைந்து கதிர்வீச்சை வெளியிடுதல்.

பெயரை முன்மொழியுங்கள்