அணு பற்றி
அணு — ஏன், எப்படி
அறிவியல் தமிழில் பேசத் தொடங்கிப் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிறது. ஆனால் ஒரே தனிமத்துக்குத் தமிழ்நாட்டுப் பாடநூல் ஒரு பெயர், இலங்கைப் பாடநூல் இன்னொரு பெயர், மரபு இலக்கியம் வேறொரு பெயர், தனித்தமிழ் அறிஞர்கள் புதியதொரு பெயர் எனத் தருகிறார்கள். மாணவர் குழம்புகிறார்; ஆய்வாளர் மூலம் தேடி அலைகிறார்.
அணு இவை அனைத்தையும் ஒரே இடத்தில் சேர்க்கிறது — எந்தப் பெயரும் மூலமின்றி இல்லை. ஒவ்வொரு பெயருக்கும் அது எங்கிருந்து வந்தது, அதன் சான்று எவ்வளவு உறுதியானது என்பது வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது. எது சரி என்று நாங்கள் தீர்ப்புச் சொல்வதில்லை; மரபுகள் ஒவ்வொன்றையும் மதித்து அருகருகே வைக்கிறோம்.
பெயர் மரபுகள்
| மரபு | தனிமப் பெயர்கள் |
|---|---|
| தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook | 98 |
| இலங்கைப் பாடநூல் · Sri Lankan textbook | 12 |
| தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia | 194 |
| மரபுப் பெயர் · Classical / traditional | 39 |
| பேச்சு வழக்கு · Everyday Tamil | 6 |
| தனித்தமிழ் ஆக்கம் · Pure-Tamil coinage | 8 |
சான்று நிலைகள்
- சான்றுடன் பாடநூல், அகராதி, இலக்கியம் போன்ற நம்பகமான மூலத்தில் பார்க்கப்பட்டது; மூலத்தின் இணைப்பு அல்லது பக்கம் தரப்பட்டுள்ளது.
- பதிவில் உள்ளது இரண்டாம் நிலை மூலத்திலோ ஆசிரியர் குழுவின் அறிவிலோ உள்ளது; முதன்மை மூலம் இன்னும் இணைக்கப்படவில்லை.
- சரிபார்க்க வேண்டும் நம்பகமான மூலம் இன்னும் கிடைக்கவில்லை. இவற்றை மேற்கோளாகக் கொள்ள வேண்டாம்.
யார் பயன்படுத்தலாம்
யாரும், கணக்கின்றி, இலவசமாக. மாணவர்கள் அட்டைகளிலும் வினாடி வினாவிலும் பயிற்சி செய்யலாம்; அவர்களிடமிருந்து எந்தத் தனிப்பட்ட தரவும் பெறப்படுவதில்லை. அறிஞர்கள் பெயர்களை முன்மொழியலாம்; ஒளியோன் ஆய்வகம் நியமித்த ஆய்வாளர்கள் அவற்றைச் சரிபார்க்கிறார்கள்.
ஒளியோன் ஆய்வகக் கருவிகள்
நிகண்டு, சுழி, செப்பம், அணு, தூது ஆகியவை ஒளியோன் ஆய்வகத்தின் தமிழ்க் கருவிகள். அணுவின் மரபுப் பெயர்கள் நிகண்டுவுடன் இணைக்கப்பட்டுள்ளன.